கொடைக்கானலில் செருப்பால் தாக்கிக் கொண்ட அரசு பேருந்து ஓட்டுநர்கள் - வைரலாகும் வீடியோ! - Dindigul District News
🎬 Watch Now: Feature Video
Published : Oct 13, 2023, 5:51 PM IST
திண்டுக்கல்: கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து மதுரைக்கு குளிர்சாதன வசதியுள்ள அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் கொடைக்கானலில் இருந்து மதுரைக்கு சாதாரண அரசு பேருந்தும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குளிர்சாதன அரசு பேருந்தை அதன் ஓட்டுநர் அந்த பேருந்தை தாமதமாக இயக்கி வந்ததாக கூறப்படுகிறது.
குளிர்சாத பேருந்தை அதன் ஓட்டுநர் தாமதமாக பேருந்தை இயக்குவதால் அடுத்து உள்ள அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. உங்களுடைய நேரத்திற்கு ஏன் நீங்கள் குளிர்சாதன பேருந்தை இயக்கவில்லை என்று அடுத்து இயங்கும் அரசு பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் கேட்டுள்ளனர்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு மோதல் வரை சென்றுள்ளது. தொடர்ந்து இருபேருந்து ஓட்டுநர்களும் செருப்புகளால் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மோதலின் போது இரு தரப்பினரும் தாகத வார்த்தைகளை பேசிக் கொண்டனர். அந்த நேரத்தில் கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், கல்லூரி மாணவிகள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இது பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.