போதையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுனரால் விபத்து; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 55 பயணிகள்! - government driver

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 26, 2023, 5:14 PM IST

தேனி : 55 பயணிகளுடன் இரவில் மது போதையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுனரால் விபத்து ஏற்பட்டுள்ளது. தேனி அருகே சென்ற போது சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவர் மீது மோதி விபத்து அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். தேனி புதிய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று இரவு திருநெல்வேலிக்கு அரசு பேருந்து புறப்பட்டது. இந்த பேருந்தில் சுமார் 55 பயணிகள் தங்களது ஊர்களுக்குச் செல்ல பேருந்தில் ஏறிப் புறப்பட்டுச் சென்றனர். 

55 பயணிகளுடன் தேனி புதிய பேருந்து நிலையத்திலிருந்து இரவு நேரத்தில் புறப்பட்ட இந்த பேருந்தைத் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள டி.வாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்ற அரசு பேருந்து ஓட்டுநர் இயக்கினார். தேனி புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட முதல் பேருந்து ஓட்டுநர், பேருந்தை மிக வேகமாக ஓட்டி வந்ததாகப் பொதுமக்கள் கூறினார். தொடர்ந்து வேகமாகப் பேருந்தை விபத்து ஏற்படுவது போல் ஓட்டியதால் பயணிகள் அச்சத்திலே பயணித்துள்ளனர். 

அப்போது தேனியை அடுத்துள்ள திருமலாபுரம் விளக்கு பகுதியில் பேருந்து வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென சாலையில் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவற்றின் மீது மோதி ஏறி நின்றது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 55 பயணிகளும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்தை ஏற்படுத்தும் விதமாகப் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுனரிடம் பேருந்து பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

அப்போது பேருந்து ஓட்டுநர் மதுபோதையிலிருந்தது தெரிய வந்துள்ளது. இதனைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் இது குறித்து அருகிலிருந்த கானா விளக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பயணிகளை மாற்று பேருந்து ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர். மது போதையில் பேருந்து இயக்கி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் ராஜாவை சோதனை செய்ததில் அவர் மது அருந்தி இருப்பதாகத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவர்கள்  உறுதி செய்தனர். 

பின்னர் இதுகுறித்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மது போதையில் அரசு பேருந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பயணிகளுடன் இரவில் மது போதையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுனர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மது பாட்டில் திருடிய நபரை சுட்டுப்பிடித்த போலீஸ்.. நீலகிரியில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.