நகர்வலம் வந்த ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரரை தேவதைப் போல் வேடம் அணிந்து வரவேற்ற சிறுமிகள்!
🎬 Watch Now: Feature Video
தேனி: பங்களா மேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் இன்று சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண கோலத்தில் யானை வாகனத்தில் நகர்வல புறப்பாடு நடைபெற்றது.
பங்களா மேடு பகுதியில் இருந்து தொடங்கிய புறப்பாடு முக்கிய வீதிகளின் வழியாக நகர்வலம் நடைபெற்றது. அப்போது தேனி ஜிஎச் சாலையில் திருமணக்கோலத்தில் நகர்வலம் வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரரை தேவதைப் போல் வேடம் அணிந்து வந்த மூன்று சிறுமிகள் ராட்சத கிரேனில் நின்றிருந்தவாறு மலர்களைத் தூவி வரவேற்றனர்.
இதையும் படிங்க: தேனியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம்!
மீனாட்சி சுந்தரேஸ்வரர் நகர்வலம் சென்ற வழியில் ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்தனர். சிறுமிகள் தேவதைப்போல் வேடம் அணிந்து ராட்சத கிரேனில் வலம் வந்ததை அப்பகுதி மக்கள் ஏராளமானோர் பார்த்துச் சென்றனர்.
இதையும் படிங்க: ''வாராரு வாராரு அழகர் வாராரு..'' - வைகை அணையில் இருந்து நீர் திறப்பு!