Tiruvannamalai: உலக நன்மைக்காக பரதநாட்டியம் ஆடிய படியே கிரிவலம் வந்த பெண்! - Tiruvannamalai Annamalaiyar Temple

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 24, 2023, 11:00 AM IST

திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். 

அது மட்டுமில்லாமல் பௌர்ணமி போன்ற விஷேச நாட்களில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். மேலும் அண்ணாமலையாரை தரிசிக்க தினந்தோறும் தமிழகம் மட்டுமில்லாமல் பிற மாநில பக்தர்கள் ஏராளமானோரும் வருகை தருகின்றனர்.

அந்த வகையில் ஆந்திர மாநிலம், நெல்லூர் பகுதியைச் சேர்ந்த பவ்ய ஹாசினி என்ற இளம் பெண் நேற்று(ஜூலை 23) அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் ராஜ கோபுரம் முன்பு வழிபட்டு உலக நன்மைக்காக திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சுமார் 14 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் பரத நாட்டியம் ஆடிய படி கிரிவலம் வந்தார். ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இந்த பரதநாட்டிய கிரிவலத்தை ரசித்து, பவ்ய ஹாசினியை பாராட்டிச் சென்றனர்.

இதையும் படிங்க: கிரேனில் வந்த 15 அடி உயர சீர் மாலை; மாஸ் காட்டிய தாய்மாமன்!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.