’ஏலே நீ ஒரு ஆர்ட்டிஸ்ட்னு நிருபிச்சட’ - ஜிபி முத்து பாணியில் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து! - வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
🎬 Watch Now: Feature Video
நெல்லை: அண்மை காலங்களில் தங்கள் நண்பர்கள் திருமணத்திற்கு கிண்டலோடும், நக்கலோடும் பதாகைகள், சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் அச்சடித்து வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவிப்பது என்பது ஒரு மரபாக மாறி வருகிறது. பொது மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, இது போன்று மாறுபட்ட முறையில் தங்களது வாழ்த்துக்களை தெரிவிப்பது என்பதை புதுமையான ட்ரெண்டாக கருதப்படுகிறது.
பொதுமக்கள் மத்தியிலும் இதுபோன்ற பதாகைகள் கவனத்தை ஈர்க்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இடிந்தகரையில் கடந்த மார்ச் 9ஆம் தேதி நடைபெற்ற திருமண விழாவில் நண்பர்கள் இணைந்து வைத்த பேனர் தற்போது வைரலாகி வருகிறது.
அதில் பிரபல யுடியூபரும், திரைப்பட நடிகருமான ஜி பி முத்துவின் உரையாடல் பாணியில், 'நீ ஒரு ஆர்ட்டிஸ்ட்னு நிரூபிச்சு... கிளிய புடிச்சிட்டியல..' என குறிப்பிட்டு திருமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்தப் பதாகையை அச்சடித்த நண்பர்கள் அதில் தங்களை குறித்தும் சின்ன சின்ன அறிமுகங்களை செய்துள்ளனர்.
மூத்தவர், காதல் மன்னன், கலவர மன்னன், கிட்டங்கி கில்லாடி, ஏக்க நாயகன், டி.ஜே.ஒயிட், மன்மதன், பவர் ரேஞ்சர், தூண்டில் பால் பேட்டையன், அங்கன்வாடி அரக்கன், மற்றும் பச்சமண்ணு எனத் தங்களை குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவர்களின் புகைப்படங்கள் உள்ளன. திருமணம் நடைபெற்று முடிந்தாலும் அகற்றப்படாமல் உள்ள இந்த பதாகை அந்த பகுதியில் செல்லும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: "மோடி இல்லைனா அதிமுக காணாமல் போயிருக்கும்" - நெல்லை தமிழ்செல்வன் ஆவேசம்!