Vaikuntha Ekadashi: ஸ்ரீரங்கத்தில் முத்து சாய கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாள்! - Aranganathar
🎬 Watch Now: Feature Video

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா, கடந்த 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி பகல் பத்து உற்சவத்தின் 4-ஆம் நாளான இன்று பெருமாள் முத்து சாய கொண்டை, வைர அபயஹஸ்தம், வைர பதக்கம், முத்துச்சரம், பவள மாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் சூடி மூலஸ்தானத்தில் இருந்து, தங்கப் பல்லக்கில் புறப்பட்டு அர்ஜுன மண்டபம் வந்தடைந்தார். ஆலயத்தின் உட்பிரகாரத்தில் வலம் வந்த பெருமாளை பக்தர்கள் ரங்கா ரங்கா என பக்தி பரவசத்துடன் வணங்கி வழிபட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST