லியோ ஹைனா டேஞ்சர் தான்! ஆனா ஒன்னு! ரகசியம் பகிரும் வனத்துறை அதிகாரி - leo original hyena
🎬 Watch Now: Feature Video
Published : Oct 17, 2023, 7:11 PM IST
ஈரோடு: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வருகின்ற 19ஆம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. லியோ படத்தின் டிரெய்லரில் கழுதை புலியுடன் (hyena) விஜய் சண்டையிடுவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.
மேலும் லியோ படத்தில் கழுதை புலி விலங்கு முக்கிய பங்கு வகிக்கும் என இயக்குநர் லோகேஷ் பல நேர்காணலில் கூறியிருந்தார். இந்நிலையில் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கழுதை புலி குணாதிசயங்கள் குறித்து தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் டிரெய்லர் காட்சியில் கதாநாயகன் விஜய்யுடன் சண்டையிடும் வன விலங்கு குறித்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி வனச்சரக அலுவலர் சதீஷ் விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், உலகத்தில் வாழும் கழுதை புலிகளின் வகைகள் மற்றும் தமிழ்நாட்டில் வாழும் கழுதை புலிகளின் உடலமைப்பு, வேட்டையாடும் விதம், வித்தியாசமாக ஒலி எழுப்பும் விதம், இனப்பெருக்கம் குறித்து விளக்கமாக பேசியுள்ளார். மேலும் கழுதைப்புலிகள் இனம் பாதுகாக்கப்பட வேண்டிய வனவிலங்கு என்றும் பேசியுள்ளார்.