உபியில் வீட்டின் சுற்றுச்சுவரில் சுற்றித்திரிந்த புலி..பல மணி நேரப் போராட்டங்களுக்குப் பின் கூண்டில் அடைப்பு..! - ஊருக்குள் புகுந்த புலியை பிடித்த வனத்துறை
🎬 Watch Now: Feature Video
Published : Dec 26, 2023, 10:28 PM IST
|Updated : Dec 26, 2023, 10:39 PM IST
உத்தரபிரதேசம்: பில்கித் மாவட்ட வனப்பகுதியில் புலிகள் காப்பகம் இருப்பதால், அவ்வப்போது புலிகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி, அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் உலா வருகின்றன. சமீப காலமாகக் குடியிருப்புகள் அதிகம் உள்ள களிநகர் பகுதியில் புலிகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்திலிருந்து வந்தனர்.
இந்நிலையில் களிநகர் பகுதியில் உள்ள அட்கோனா கிராமத்தில் திங்கள்கிழமை இரவு 2 மணியளவில் விவசாயி ஒருவரின் வீட்டு நாய் குலைத்துக் கொண்டே இருந்த நிலையில், அவர் வெளியே வந்து பார்த்த போது, வீட்டின் சுற்றுச்சுவர் மேல் புலி ஒன்று இருந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்நிலையில் விவசாயி கிராம மக்களுக்குத் தகவல் கொடுத்த நிலையில் அவ்வூர் மக்கள் தங்கள் வீடுகளின் கூரையின் மீது ஏறி புலியைப் பார்க்க ஆரம்பித்தனர். மேலும், புலியை விரட்டத் தீப்பந்தங்கள் மற்றும் டார்ச் லைட்டுகளை புலியில் மேல் அடித்தும், புலி அவ்விடத்தை விட்டு நகராமல் சுமார் 8 மணி நேரம் சுவர் மேல் நின்று கொண்டிருந்துள்ளது.
பின்னர், வனத்துறையினருக்குக் கிராம மக்கள் தகவல் கொடுத்த நிலையில், புலியைப் பிடிக்க வனத்துறையினர் விரைந்தனர். பின், பல மணி நேரப் போராட்டங்களுக்குப் பின்னர் புலியைக் கூண்டிற்குள் வனத்துறையினர் அடைத்தனர்.