Video:சேலத்தில் பொங்கலிட்டு கொண்டாடிய வெளிநாட்டினர் - சமத்துவ பொங்கல் விழாவில் வெளிநாட்டினர்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-17517718-thumbnail-3x2-slm-pongal.jpg)
சேலம்: தமிழர் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, அதன் ஒரு பகுதியாக சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள ஹோலி கிராஸ் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா இன்று(ஜன.18) கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள் பாரம்பரிய வேட்டி, சட்டை அணிந்து மயிலாட்டம் மற்றும் பொய்க்கால் குதிரை, காவடி ஆட்டம் உள்ளிட்டப் பல்வேறு பாரம்பரிய கலைகளை நடனமாடி அசத்தினர். தொடர்ந்து சிலம்பாட்டம், பானை உடைக்கும் போட்டி எனப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தினர். அதேபோல வெளிநாட்டினரும் வேட்டி, சட்டை அணிந்து பானை உடைத்து போட்டியில் பங்கேற்று, தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. மாணவர்களின் கண் கவர் பாரம்பரிய நடன நிகழ்ச்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.