முழு கொள்ளளவை நெருங்கும் வைகை அணை.. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..! - heavy rain fall in theni
🎬 Watch Now: Feature Video
Published : Nov 7, 2023, 8:48 PM IST
தேனி: தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக வைகை அணையின் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக 71 அடி கொள்ள அளவு கொண்ட வைகை அணை, இன்று மாலை 5 மணி அளவில் 68.50 அடியை எட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அதனையடுத்து தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வைகை அணைக்கு தற்போது வினாடிக்கு 2,796 கன அடி நீர்வரத்து இருப்பதால் வைகை அணை இன்னும் ஓரிரு நாளில் முழு கொள்ளளவை எட்டும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அணை 69 அடியை எட்டியவுடன் 3வது மற்றும் கடைசி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரியாக ஆற்றில் திறந்துவிடப்படும் என்றும் பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், வைகை அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும் நிலை உள்ளதால் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.