திருமண வீட்டில் திடீர் தீ விபத்து.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள் - fire accident

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 9, 2023, 8:38 AM IST

சென்னையில் உள்ள தியாகராய நகர் யோகம்பாள் தெருவில் வசித்து வருபவர் பிரமோத் சர்டா (48). தொழிலதிபரான இவர், மரப்பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். பிரமோத்தின் அண்ணன் ஜமாலின் மகள் திருமணம் பிரமோத்தின் இல்லத்தில் பிரம்மாண்டமாக கடந்த செவ்வாய் கிழமை நடந்து முடிந்தது. 

மேலும், திருமணத்திற்காக வந்த உறவினர்கள் 30க்கும் மேற்பட்டோர் பிரமோத்தின் இல்லத்தில் தங்கியிருந்து உள்ளனர். இந்த நிலையில், திடீரென நேற்றைய முன்தினம் நள்ளிரவு 2.30 மணி அளவில் முதல் தளத்தில் பொருத்தப்பட்டிருந்த ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு புகை கிளம்பி உள்ளது. 

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வீட்டிலிருந்தவர்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர். பின்னர் உடனடியாக தீ பரவி முதல் தளம் முழுவதுமாக கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இது குறித்து உரிமையாளர் பிரமோத் தீயணைப்பு துறைக்கு அளித்து உள்ளார்.

இந்தத் தகவலின் பேரில் தியாகராய நகர், அசோக் நகர், தேனாம்பேட்டை ஆகிய தீயணைப்பு வாகனங்களில் வந்த சுமார் 15 தீயணைப்பு வீரர்கள், போராடி அரை மணி நேரத்தில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். உரிய நேரத்தில் வீட்டிலிருந்த நபர்கள் வெளியே ஓடி வந்ததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனால் முதல் தளத்தில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முழுவதுமாக எரிந்து நாசமாகி உள்ளது.

இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக பாண்டி பஜார் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது தீ விபத்தின் போது வெளியே ஓடி வந்த நபர்கள் அனைவரும் ஓம் நமச்சிவாயா, ஓம் நமச்சிவாயா என கூச்சலிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.