வீடியோ: ஊருக்குள் புகுந்த காட்டு யானை - விரட்டியடித்த விவசாயிகள் - ஊருக்குள் புகுந்த காட்டு யானை
🎬 Watch Now: Feature Video
ஈரோடு மாவட்டம் தாளவாடி வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை சேசன் நகர் வழியாக பாரதிபுரம் கிராமத்திற்குள் நுழைந்தது. அங்குள்ள விவசாய நிலங்கள் வழியாக சென்ற யானை அப்பகுதியில் மக்காச்சோள பயிரை சேதப்படுத்தியது. இதையடுத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒற்றை காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒற்றை காட்டு யானை விவசாய நிலங்கள் வழியாக ஓடியது. தொடர்ந்து காட்டு யானையை விரட்டிச் சென்ற நிலையில் காட்டு யானை பல கிலோமீட்டர் தூரம் ஓடி பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. காட்டு யானையை விடாமல் துரத்திச் சென்று விரட்டியடித்ததால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
இதையும் படிங்க: வீடியோ: கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி