புறம்போக்கு நிலத்தில் பள்ளி வேண்டும் - செல்போன் டவரில் ஏறி விவசாயி தர்ணா! - kalavai ranipet
🎬 Watch Now: Feature Video
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த பொன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (35). விவசாயியான இவரது வீட்டின் அருகே உள்ள சுமார் 5 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை, கடந்த 1983ஆம் ஆண்டு தனி நபருக்கு பட்டா கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது வரை அந்த நிலம் பயன்படுத்தாமல் உள்ளதால், மயானத்திற்கு செல்லும் வழியாக பொதுமக்கள் அதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த நிலத்தில் அரசுப் பள்ளி மற்றும் இதர அலுவல் கட்டடங்களை அமைக்க வேண்டும் என கார்த்திக், நேற்று (மார்ச் 24) 110 அடி உயரம் கொண்ட செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கலவை காவல் துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆகியோர் கார்த்திக்கிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 2 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு கார்த்திக்கை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.