IPL Final: சிஎஸ்கே அணியை உற்சாகப்படுத்த கோவையில் பேரணி, குத்தாட்டம் போட்ட ரசிகர்கள்!

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 28, 2023, 10:59 AM IST

கோயம்புத்தூர்: நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதை அடுத்து, உற்சாகப்படுத்தும் நிகழ்வாகக் கோவையில் நேற்று வாகன பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டும் தேனியின் புகைப்படத்துடனும் சாலையில் ஊர்வலமாகச் சென்றனர்.

முன்னதாக பட்டாசு வெடித்து மேளதாளம் அடித்து விசில் போட்டு அவர்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். மேலும் இந்த வருடம் கோப்பையை நாம் நிச்சயம் வெல்வோம் என கோசத்தை முழக்கங்களையும் எழுப்பி சாலையில் உருவாக வந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸின் (சிஎஸ்கே) அதிகாரப்பூர்வ 'ஸ்ட்ராங் பிஸ்கட் பார்ட்னர்' ஐடிசி சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க் பிஸ்கட்கள் சார்பாக நேற்று (மே27) பந்தயச் சாலையிலிருந்து 'ஸ்ட்ராங்கா விசில் போடு' இரு சக்கர பேரணி நடை பெற்றது.

மேலும் மே 28-ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ள 2023 ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு CSK தயாராகி வருவதைக் கொண்டாடவும், ஊக்குவிக்கவும் இந்த நிகழ்ச்சி அர்ப்பணிக்கப்பட்டது. இந்த அணிவகுப்பில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஒன்றிணைந்து CSK அணிக்கு தங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

CSK ரசிகர்கள், தங்கள் அணியின் ஜெர்சியை அணிந்து ரேஸ்கோர்ஸ் சாலையில் நடனம் மற்றும் விசில் அடித்து குதூகலத்தையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தினர். ரசிகர்கள் பேரணி முழுவதும் விசில் ஒலி எழுப்பிய படி வந்தனர். மேலும், CSKக்கு  Strongaa Whistle Podu என்று ஆரவாரமும் செய்தனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.