மறைந்த கோவை டிஐஜி விஜயகுமார் குடும்பத்தினருக்கு முன்னாள் டிஜிபி விஜயகுமார் நேரில் ஆறுதல்! - tn police
🎬 Watch Now: Feature Video
தேனி : கோவை டிஐஜி விஜயகுமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவைத் தொடர்ந்து முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் எனப் பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அவரது சொந்த ஊரான தேனிக்கு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உட்பட பல ஐபிஎஸ் அதிகாரிகள் சென்று, விஜயகுமாரின் உடலை தோளில் சுமந்து கொண்டுபோய், தேனி மின் மயானத்தில் வைத்து 21 குண்டுகள் முழங்க அவரது உடலை தகனம் செய்ய உதவினர். மேலும் டிஐஜி விஜயகுமாரின் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனைத்தொடர்ந்து தேனியில் ரத்தினம் நகரில் உள்ள விஜயகுமாரின் இல்லத்தில் பல கட்சித் தலைவர்கள், ஐபிஎஸ் அதிகாரிகள், ஆறுதல் தெரிவித்து செல்கின்றனர். இந்நிலையில் முன்னாள் டிஜிபி விஜயகுமார் தேனியில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் வந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே மற்றும் காவல் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க :விஷச்சாராயம் குடித்து 22 பேர் பலியான வழக்கு - இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!