'அண்ணாமலை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை வந்துவிட்டது' - ஈவிகேஎஸ் இளங்கோவன் - ஈரோடு இடைத்தேர்தல்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-17892253-thumbnail-4x3-evks.jpg)
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றிபெற்ற வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
“மக்கள் திமுகவிற்கு அளித்த ஆதரவு அமோக வெற்றியைத் தேடி தந்தது. இந்த தேர்தலின் விளைவாக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெறும். தோல்வி அடைந்த அதிமுகவினர் பொய் குற்றச்சாட்டுகளை சொல்லி வருகிறார்கள். தேர்தலில் பரப்புரை செய்த பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது ராஜினாமா செய்துவிட்டு வீட்டிற்குச் செல்ல வேண்டிய நிலைமை வந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.