கொடுமுடி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் தகுதி நீக்கம் - அரசிதழ் அறிவிக்கை வெளியீடு! - ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் நீக்கம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-18015969-thumbnail-4x3-erd.jpg)
ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தில் துணைத் தலைவராக உள்ள பிரீத்தி செந்தில்குமாரை தகுதி நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. மொத்தம் 6 வார்டுகளை கொண்ட இந்த ஊராட்சி ஒன்றியத்தில், 3 திமுக, 1 கொமதேக, 1 அதிமுக, 1 சுயேச்சை உறுப்பினர்கள் உள்ளனர்.
ஊராட்சி ஒன்றியத்தலைவராக திமுகவைச் சேர்ந்த லட்சுமியும், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவராக திமுகவைச் சேர்ந்த பிரீத்தியும் பதவி வகித்து வந்தனர். இதில், துணைத் தலைவர் தன்னிச்சையாக செயல்படுவதாகக் கூறி அவருக்கு எதிராக, தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றி அதனை அரசுக்கு அனுப்பி இருந்தனர்.
இது தொடர்பாக கோட்டாட்சியர் முன்னிலையில் வாக்கெடுப்பு நடத்தி அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. இந்நிலையில், துணை தலைவர் பிரீத்தியை பதவி நீக்கம் செய்து அரசு முதன்மைச் செயலாளர் மூலம் அரசிதழ் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவின் தூண்டுதலின் பேரில் பாலை கீழே ஊற்றி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர் - அமைச்சர் சா.மு. நாசர்