சாமி சிலையில் இருந்த 6 பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம நபர்.. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை.. - CCTV footage of jewelery theft
🎬 Watch Now: Feature Video

ஈரோட்டில் பூசாரி விளக்கு ஏற்றும் போது சாமி சிலையில் இருந்த நகையை திருடிய நபரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். ஈரோடு NMS காம்பவுண்டில் அங்காளம்மன் கோயில் அமைந்துள்ளது. அந்த கோயிலின் பூசாரியான நாகராஜ், வழக்கம்போல சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து விளக்கு ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
நேற்று (ஜூலை 9) விடுமுறை நாள் என்பதால் பக்தர்களின் கூட்டம் கோயிலில் குறைந்தே காணப்பட்டுள்ளது. அதனை அடுத்து எப்போதும் போல பூசாரி கோயிலில் விளக்குகளை ஏற்றியுள்ளார். விளக்கு வெளிச்சத்தில் பார்க்கும் போது சாமி சிலையில் இருந்த 6 பவுன் தங்க நகை காணாமல் போயிருந்தது தெரியவந்து உள்ளது. இதனைக் கண்ட பூசாரி நாகராஜ், கோயில் நிர்வாகிகளிடம் நகை காணாமல் போனது குறித்து தெரிவித்துள்ளார்.
அதன் பின் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த கேமரா காட்சிகளை பார்த்த போது, சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர், பூசாரி விளக்கு ஏற்றும் போது சாமி சிலையில் இருந்த நகையை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து நகர போலீசாருக்கு அளித்த புகாரில் பேரில் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.