சந்திரயான்-3 வெற்றியை இனிப்பு வழங்கி கொண்டாடிய எடப்பாடி பழனிசாமி! - salem district news
🎬 Watch Now: Feature Video
Published : Aug 23, 2023, 10:28 PM IST
சேலம்: சந்திரயான் 3 விண்கலம் இன்றைய தினம் நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகள் இந்த முயற்சியில் ஈடுபட்டு தோல்வி அடைந்த நிலையில், இந்தியா அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்தி உள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாகச் சேலம், நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவிற்கும் அவரது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வின் போது முன்னாள் அமைச்சர் தங்கமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜமுத்து, சுந்தரராஜன், ஜெய்சங்கரன், வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்ஆர்கே. அப்பு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேடசந்தூர் பரமசிவம், ஒன்றிய கழக செயலாளர்கள் வருதராஜ், வெங்கடேஷ், ஜெகநாதன், பாலச்சந்திரன், வையாபுரி, ஏவி. ராஜு மற்றும் அஇதிமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். எடப்பாடி பழனிசாமியின் இந்த வீடியோவை அதிமுகவினர் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.