'இன்னும் ஏன்டா முழிச்சிட்டு இருக்க.. தூங்கு' - யானைகளின் ரிலாக்ஸ் வீடியோ! - Coimbatore news
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருக்கும் தனியார் எஸ்டேட்களில், காட்டு யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் அவ்வப்போது நடமாடி வருகிறது. இந்த நிலையில் தற்போது மேற்குதொடர்ச்சிமலைப் பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், நிழல் தேடி காட்டு யானைகள் செல்கின்றன.
அந்த வகையில் வால்பாறை அருகே உள்ள புது தோட்டம் தனியார் எஸ்டேட்டில் குட்டியுடன் இருக்கும் யானைகள், களைப்பாறும் விதமாக தோட்டத்தின் காலி இடங்களில் ஓய்வு எடுத்துள்ளது. இதனை அப்பகுதி தேயிலைத் தோட்டத் தொழிலாளர் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு வனப் பகுதிகளில் இருந்து யானைகள் அடங்கிய கூட்டம் அல்லது ஒற்றை யானை, கோடை கால வெப்பத்தைத் தணிக்க நீர் நிலைகளைத் தேடி அவ்வப்போது சாலைகளுக்கும், குடியிருப்புப் பகுதிகளுக்கும் வருவது தொடங்கி உள்ளது. இதனால் மக்கள் விழிப்புடன் இருக்கவும், யானைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வனத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.