முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் தந்தை மறைவு: ஈபிஎஸ் நேரில் சென்று ஆறுதல்! - K T Rajenthra Bhalaji
🎬 Watch Now: Feature Video
விருதுநகர்: அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மாவட்ட அதிமுக செயளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜியின் தந்தை தவசிலிங்கம் உடல்நலக் குறைவால் கடந்த 17-ஆம் தேதி காலமானார். அவரது மறைவிற்கு முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து நேற்று சிவகாசியில் உள்ள கே.டி.ராஜேந்திர பாலாஜியின் இல்லத்திற்கு நேரில் சென்ற எடப்பாடி பழனிசாமி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அதன் பின்னர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் தந்தை தவசிலிங்கம் புகைப்படதிற்கு ஈபிஎஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர், நத்தம் விசுவநாதன், காமராஜ், ராஜலட்சுமி, சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, மான்ராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.