Video:தொடர்மழையால் ரப்பர் தொழில் கடும் பாதிப்பு! - ரப்பர் பால்வடிக்கும் தொழிலில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்
🎬 Watch Now: Feature Video
கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் மிக முக்கியத்தொழில்களில் ஒன்று ரப்பர் தொழில். உலகத்தரம் வாய்ந்த ரப்பர் குமரி மாவட்டத்தில் உள்ளது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் மழையால் முக்கிய விவசாயமாக உள்ள ரப்பர் பால் வடிக்கும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 250 டன்னுக்கும் மேல் ரப்பர் ஏற்றுமதி முடங்கியுள்ளது. இதனால் சுமார் 5 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ரப்பர் பால்வடிக்கும் தொழிலில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் மழையால் ரப்பர் பால்வடிக்கும் தொழிலாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST
TAGGED:
ரப்பர் தொழில் கடும் பாதிப்பு