கருணாநிதி நினைவு நாள்: 'உங்கள் கனவுகள் நிறைவேறும் காலம்' என்ற தலைப்பில் வீடியோ வெளியிட்ட முதலமைச்சர்! - chennai news
🎬 Watch Now: Feature Video
சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5-ஆவது நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 7) அமைதிப் பேரணி நடைபெறும் என்று திமுக சார்பில் அறிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், 'உங்கள் கனவுகள் நிறைவேறும் காலம்' என்ற தலைப்பில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “வங்கக் கடலோரம் வாஞ்சிமிகு தென்றலின் தாலாட்டில் தமிழ்த்தாயின் தலைமகன், பேரறிஞர் அண்ணாவுக்குப் பக்கத்தில் ஓய்வெடுக்கும் தலைவர் கலைஞரே ஓர் நல்ல செய்தியோடு உங்களைக் காண அதிகாலையில் பேரணியாக வருகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இந்த அமைதிப் பேரணி, சென்னை அண்ணா சாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை அருகிலிருந்து புறப்பட்டு, காமராஜர் சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் திரளாக பங்கேற்பார்கள் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.