கும்பகோணத்தில் இதுவரை 200 மெட்ரிக் டன் குப்பைகள் அதிரடியாக அகற்றம்! - குப்பைகள்
🎬 Watch Now: Feature Video
Published : Nov 14, 2023, 1:50 PM IST
தஞ்சாவூர்: கும்பகோணம் மாநகாட்சிக்கு உட்பட்டு 48 வட்டங்கள் உள்ளது. தற்போது தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில், அந்த 48 வட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு முக்கிய தெருக்களில் மட்டும் நேற்று ஒரே நாளில், சுமார் 200 மெட்ரிக் டன் குப்பைகள் அதிரடியாக அகற்றப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இன்றும் குப்பை அகற்றும் பணிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.
அதனை கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் மற்றும் மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன் ஆகியோர் குஞ்சிதபாதம் தெருவில் குப்பை அகற்றும் பணிகளை நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினர். அப்போது குப்பைகளை அகற்றும் பணியாளர்கள் ஒரு சிலர் கையுறை அணியாமல் குப்பைகள் அகற்றுவதை கண்டு, அவர் கண்டித்தார்.
அப்போது, இனி கையுறை அணியாமல் குப்பைகள் அகற்றக் கூடாது என அறிவுரை வழங்கியதுடன், சம்பந்தப்பட்ட அலுவலர்களை அங்கிருந்தபடி அலைபேசி வாயிலாக அழைத்து, கையுறை அணியாமல் யாரையும் குப்பை அள்ள அனுமதிக்கக் கூடாது, ஆகையால் தேவையான கையுறைகளை அவர்களுக்கு உடனடியாக வழங்கவும், தொடர்ந்து கையுறை அணிந்து குப்பைகளை அகற்றுகிறார்களா என மேற்பார்வையிட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.