'மதுர குலுங்க குலுங்க..' மதுரை தீபாவளி கொண்டாட்டத்தின் ட்ரோன் வீடியோ காட்சிகள்! - Diwali celebration in Madurai drone visual
🎬 Watch Now: Feature Video
Published : Nov 13, 2023, 9:48 AM IST
மதுரை: தீபாவளி பண்டிகையானது உலகம் முழுவதும் நேற்று (நவம்பர் 12) அமர்க்களமாக கொண்டாடப்பட்டது. பொதுவாக தீபாவளி என்றாலே தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். அப்படிப்பட்ட தீபாவளி திருநாளானது, மதுரையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
மதுரையே குலுங்க தீபாவளி திருநாளை மதுரை மக்கள் கொண்டாடியுள்ளனர். தீபாவளிக்கு முந்தைய நாள் நள்ளிரவு வரை தீபாவளிக்குத் தேவையான பொருட்களை வாங்க விளக்குத்தூண், கீழமாசி வீதி, தெற்மாசி வீதி என 4 மாசி வீதிகளிலும் கூட்டம் அலைமோதியது. பின்னர் மறுநாள் அதிகாலையிலே எழுந்து எண்ணெய்யை உடல் முழுவதும் குளிர வைத்து, குளித்து, புத்தாடை அணிந்து, வெடி வெடித்து கொண்டாடினர்.
அப்படிப்பட்ட தீபாவளிக்கு சமீபமாக, தீபாவளி பட்டாசு வெடிப்பதற்கு பல கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது. காலை 1 மணி நேரமும் இரவு 1 மணி நேரம் மட்டுமே வெடிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதித்த காரணத்தால், அனுமதி அளித்த அந்த ஒரு மணி நேரத்தில் மதுரை மக்கள் பட்டாசுகளை வெறித்தனமாக கொளுத்திக் கொண்டாடி உள்ளனர். மேலும், நேற்று இரவு மதுரை மக்கள் பட்டாசு வெடித்த காட்சிகள் கழுகுப் பார்வைக் காட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ வெளியாகி சமூக வலைத்தளத்தில் மதுரை மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.