சுதந்திர தின விழா: கைத்தறியால் ஆன தேசியக் கொடி பொது மக்களுக்கு வழங்கல்! - ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு தேசிய கொடி
🎬 Watch Now: Feature Video
பெரம்பலூர்: சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுதந்திர தின விழாவின் கொண்டாட்டத்திற்கான தயாரிப்பு மற்றும் முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வரும் பொது மக்களுக்கு கைத்தறியால் ஆன தேசியக் கொடி வழங்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளாகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்களுக்கு, மாவட்ட ஆட்சியர் கற்பகம் கைத்தறியால் செய்யப்பட்ட தேசியக் கொடியினை வழங்கினார். இது தேசிய ஒருமைப்பாடு, தேசப்பற்று, நாட்டின் ஒற்றுமை ஆகியவற்றை ஒவ்வொருவரின் உள்ளத்தில் விதைக்கும் வகையில் இருந்தது.
மேலும் மக்கள் தேசியக் கொடியை மகிழ்ச்சியோடு பெற்று கொண்டனர். பொது மக்கள் தேசியக் கொடியை தங்களது வீடுகளில் வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். மேலும் இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.