விஜயகாந்த் உடலைப் பார்த்துக் கதறி அழுத மாற்றுத் திறனாளி..! - vijayakanth last ride
🎬 Watch Now: Feature Video
Published : Dec 29, 2023, 6:53 PM IST
சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் செவ்வாய்கிழமை (டிச.26) இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்து, அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், பின்னர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று (டிச.28) காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் காலமானார். இதன் தொடர்ச்சியாக, விஜயகாந்த்தின் உடல் பொதுமக்கள், கட்சி தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை, அண்ணாசாலையில் உள்ள தீவுத்திடலில் இன்று (டிச.29) காலை முதல் பொதுமக்கள் பார்வைக்கு உடல் வைக்கப்பட்டிருந்தது.
அப்போது விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மாற்றுத்திறனாளிகள் சிலர் வருகை தந்தனர். அங்கு அவர்களைப் பொதுமக்கள் வரக்கூடிய வழியில் இல்லாமல் சிறப்பு வழியில் காவல்துறையினர் அனுமதித்தனர்.
அப்போது, மேடை மீது வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் உடலைப் பார்த்ததும் அஞ்சலி செலுத்த வந்திருந்த மாற்றுத்திறனாளி ஒருவர் கதறி அழுதார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் காண்போரின் கண்களிலும் கண்ணீர் வழியச் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.