லியோ படம் வெற்றி பெற விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை! - leo
🎬 Watch Now: Feature Video
Published : Oct 18, 2023, 9:24 AM IST
திண்டுக்கல்: நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள லியோ திரைப்படம், வருகிற 19ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது லியோ படத்திற்கான முன்பதிவு டிக்கெட் பெரும்பாலும் விற்று தீர்ந்த நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், லியோ படம் வெற்றி பெற வேண்டி, விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பாக பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்தனர்.
தென்தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நத்தம் மாரியம்மன் கோயிலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், தொகுதி ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் தலைமையில் ஒன்று கூடி, வருகிற 19ஆம் தேதி விஜய் நடிப்பில் வெளியாக உள்ள லியோ படம் வெளியாவதில், எந்த வித தடையும், இடையூறுகளும் இல்லாமல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து திரைகளிலும் வெளியிடப்படுவதற்காகவும், படம் வெற்றி அடைய வேண்டியும் பூஜை செய்யப்பட்டது.
மேலும் தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் படம் நல்ல வரவேற்பு பெற வேண்டும் என்று வீடியோ பட போஸ்டர்களுடன் பொங்கல் வைத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகளை நடத்தினர்.