வீடியோ: தொடங்கியது கொசவபட்டி ஜல்லிக்கட்டு போட்டி - திண்டுக்கல் கொசவபட்டி ஜல்லிக்கட்டு
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: சாணார்பட்டி அருகே கொசவபட்டி புனித உத்திரிய மாதா கோயில் திருவிழாவையொட்டி வருடந்தோறும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார் .
இதில், 350 காளைகளும் 400 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்ள உள்ளார்கள். சிறந்த வீரர்களுக்கு தங்கம்,வெள்ளி நாணயம், டிவி, கட்டில், பீரோ, செல்போன், சைக்கிள், அண்டா உட்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதில் கால்நடை மருத்துவர்கள் காளைகளையும், மாடுபிடி வீரர்களையும் சோதனை செய்து பங்கேற்க அனுமதி வழங்கினர். 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.