மயிலாடுதுறையில் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு ஜெயின் சமூகத்தினர் உற்சாக கொண்டாட்டம் - Mahavir Jayanti
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை: மகாவீரர் ஜெயந்தி விழா இன்று ஜெயின் சமூகத்தினரால் நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஜெயின் சமூக குடும்பத்தினர் தொழில் நிமித்தமாக வந்து தங்கி வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு ஜெயின் சமூகத்தினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை முதலியார் தெருவில் உள்ள மகாவீரர் கோயிலில் இன்று காலை முதல் அவர்கள் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, கோயிலில் இருந்து பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஜெயின் சமுதாய மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் மகாவீரர் உருவம் பொருத்திய ரதத்துடன் ஊர்வலமாகப் புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியே நடனம் ஆடிய படி வலம் வந்தனர். இதனை சாலையில் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் ரசித்தவாறு சென்றனர்.
தமிழகத்தில் கோடைக்காலம் துவங்கும் முன்னரே பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸைத் தாண்டி கடும் வெயில் காரணமாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில், மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு ஜெயின் சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சீர்காழி புதிய பேருந்து நிலையம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை சீர்காழி காவல் ஆய்வாளர் சிவக்குமார் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார். இதேபோல் பழைய பேருந்து நிலையம், கொள்ளிட முக்குட்டு, கடை வீதி ஆகிய நான்கு இடங்களில் பொதுமக்களின் தாகத்தை தணிக்க நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஆண்களுக்கு இணையாக கடலில் மீன்பிடிக்கும் பெண்கள்.. தூத்துக்குடி மீனவப் பெண்களின் கண்ணீர் கதை!