thumbnail

By

Published : Aug 11, 2023, 10:59 PM IST

ETV Bharat / Videos

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக சீன எல்லை வரை தனியாக செல்லும் கோவை பெண்!

கோயம்புத்தூர்: கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த 57 வயதான சங்கீதா ஸ்ரீதர் என்ற பெண்மணி, பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தனி மனிதராகக் கோவையிலிருந்து சீன எல்லை வரை தனியாக காரில் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்கிறார். 

அபுதாபியில், E Government ஆலோசகராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு மார்பக புற்று நோய் இருப்பது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு உள்ளார். இந்நிலையில் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தனி மனிதராகச் சீன எல்லைப் பகுதிக்கு காரில் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்கிறார். 

வருகின்ற 15 ஆம் தேதி, சுதந்திர தின விழா அன்று இந்த பயணமானது துவங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த பயணத்தைக் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடி அசைத்துத் துவக்கி வைத்தனர். மேலும் இந்நிகழ்வில் canincancer.com என்ற இணையதள பக்கத்தையும் மக்கள் பயன்பாட்டுக்கு மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். 

இவர் செல்லும் பகுதியானது சீன எல்லைப் பகுதியில் உள்ள சியாச்சன் என்ற பதினெட்டாயிரம் அடி உயரமுள்ள மலைப்பகுதியாகும். இங்கு வெப்பநிலை -40° முதல் -50° வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவர் கூறுகையில், "மார்பக புற்றுநோய் பற்றி யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். அனைவரும் ஒருமுறை மருத்துவமனை சென்று பரிசோதனை மேற்கொள்ளுமாறு" கேட்டுக்கொண்டார். முன்னதாக அவர் பயணம் மேற்கொள்ளும் காரின் பாதுகாப்பு அம்சங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து உறுதிப்படுத்தினார். 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.