ஊரை மிரட்டும் சுள்ளி கொம்பன் யானை - மின் வேலிக்குள் புகுந்து அட்டகாசம்! - கேரளா
🎬 Watch Now: Feature Video
ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்தில், கேரளாவில் இருந்து வந்த சுள்ளி கொம்பன் யானை கடந்த ஒரு மாதமாக ஆழியார் அணை பகுதியில் முகாமிட்டுள்ளது. மேலும் மலைவாழ் மக்கள் குடியிருப்புகள், ஆழியார் அறிவு திருக்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் இரவு மற்றும் மாலை நேரங்களில் உலா வரும் யானை, அவ்வப்போது போக்குவரத்திற்கு இடையூறாகவும் உள்ளது.
விவசாய நிலங்களுக்குள் புகும் யானை பயிர்களை சேதப்படுத்துகிறது. மேலும் ஊருக்குள் வலம் வரும்போது சில நேரங்களில் நான்கு சக்கர வாகனங்களையும் சேதப்படுத்துகிறது. சுள்ளி கொம்பன் யானை அடிக்கடி சலைகளில் வலம் வருவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
ஒற்றை யானையை கண்காணிக்க வனத்துறையினர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். பொதுமக்கள் தங்களை யானையிடமிருந்து காத்துக் கொள்ள வனத்துறையினருடன் இணைந்து தற்காலிகமாக மின் வேலி அமைத்து இருந்தனர். நேற்று(மார்ச்.4) இரவு வனத்தை விட்டு வெளியே வந்த சுள்ளி கொம்பன் யானை, ஆழியார் அறிவு திருக்கோயில் பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மின் வேலி இடையே நுழைந்து அப்பகுதியில் உலா வந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.