சித்ராபௌர்ணமி முழுநிலவு திருவிழா: பச்சை பட்டுடுத்தி அருள்பாலித்த கண்ணகி தேவி! - கண்ணகி கோட்டம்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 5, 2023, 8:02 PM IST

தேனி: கூடலூர் அருகே உள்ள விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது, மங்கல தேவி கண்ணகி கோயில். கடல் மட்டத்திலிருந்து சுமார் ஐந்தாயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று சித்திரை முழு நிலவு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.‌ இதேபோன்றும் இந்த ஆண்டும் திருவிழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாட்டில் தேனி மற்றும் கேரளாவின் இடுக்கி மாவட்ட நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

இத்திருவிழாவிற்குப் பக்தர்கள் கேரளாவின் குமுளியில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரம், தேக்கடி - பெரியார் புலிகள் காப்பகம் வனப் பாதை வழியாக நடந்தும், ஜீப் மூலமாகவும், சென்று வருகின்றனர். அதேபோல், தமிழ்நாட்டின் தேனி மாவட்டம், லோயர்கேம்ப் பளியங்குடியில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தூரம் நடந்தும் கண்ணகி கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தனர்.

பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு, போக்குவரத்து, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேனி மற்றும் இடுக்கி மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் செய்யப்பட்டுள்ளன. சுமார் 1,500க்கும் மேற்பட்ட இரு மாநில போலீசார் பாதுகாப்புப் பணியிலும், இரு மாநில வனத்துறையினர் கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டனர்.

மங்கல தேவி கோட்டத்தில் அலங்கரிக்கப்பட்ட கண்ணகி அம்மன் பச்சை நிறப்பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த முழுநிலவு விழாவில், தமிழ்நாடு - கேரள மாநிலத்தைச் சுமார் 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கண்ணகி தேவியை வழிபட்டனர்.

இதையும் படிங்க: Kallalagar: தேனியில் ஒரே நேரத்தில் ஆற்றில் இறங்கிய இரண்டு கள்ளழகர்கள்!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.