Dantewada: தாந்தேவாடா மாவோயிஸ்டு தாக்குதல் வீடியோ வெளியானது
🎬 Watch Now: Feature Video
சத்தீஸ்கர் மாநிலம், தாந்தேவாடா மாவட்டத்தின் அரன்பூர் என்ற பகுதியில் மாவோயிஸ்டுகள் இருப்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து, நேற்று (ஏப்ரல் 26) மாநில சிறப்பு காவல் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். பின்னர், அங்கு இருந்து திரும்பி வரும்போது, கன்னி வெடி வெடித்ததில் சிறப்பு காவல் படையினர் சென்ற வாகனம் வெடித்தது.
இந்த தாக்குதலில், காவல் படையினரின் வாகனம் தூக்கி வீசப்பட்டது. மேலும், இந்தச் சம்பவத்தில் 10 காவலர்கள் உள்பட ஒரு ஓட்டுநர் உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகலைத் தொடர்பு கொண்டு விவரங்களைக் கேட்டறிந்தார்.
இந்த நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. மாவட்ட ரிசர்வ் காவல் துறையைச் (DRG) சார்ந்த ஒருவரால் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்கிறது. அதில், ஒருவர், ‘உத் கயா, புரா உத் கயா’ என கூறுகிறார். இதற்கு ‘வாகனம் முழுவதுமாக தகர்க்கப்பட்டது’ என அர்த்தம். மேலும், இந்த வீடியோவின் முடிவில் சுமார் 10 அடி ஆழமான பள்ளமும் தெரிகிறது.