விபத்தில் கால்களை இழந்தவர்களுக்கு உதவி - சேதனா அறக்கட்டளை மூலம் செயற்கை மூட்டுகள் வழங்கல்!

By

Published : May 7, 2023, 6:17 PM IST

thumbnail

சென்னை : விபத்து உள்ளிட்டப் பேரிடர்களில் சிக்கி கால்களை இழந்தவர்களுக்கு இலவசமாக செயற்கை மூட்டுகள் (Aritifial Limbs) வழங்கும் நிகழ்ச்சி சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்றது. சென்னை கோட்டூர்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சேதனா அறக்கட்டளை மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை நோபல் ஹார்ட்ஸ் தொண்டு அமைப்பு இந்த நிகழ்வை நடத்தியது.

சென்னை உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்துறை பிரபலங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். விபத்து உள்ளிட்ட பல்வேறு பேரிடர்களில் சிக்கி கால்களை இழந்த ஏராளமானவர்களுக்கு Aritifial Limbs எனப்படும் செயற்கை மூட்டுகள் வழங்கப்பட்டன. மேலும், மருத்துவர்களைக் கொண்டு பயனாளிகளுக்கு செயற்கை மூட்டுகள் பொருத்தப்பட்டன.      

முன்னதாக இசைக் கலைஞர் டிரம்ஸ் சிவமணி விழாவை தொடங்கி வைத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பயனாளிகளுக்கு இசைக் கலைஞர் டிரம்ஸ் சிவமணி செயற்கை மூட்டுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியை சேதனா அறக்கட்டளை மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை நோபல் ஹார்ட்ஸ் தொண்டு அமைப்பின் தன்னார்வலர்கள் நடத்தினர்.  

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.