விளைநிலத்தில் அட்டகாசம் செய்யும் யானைகளின் ட்ரோன் வீடியோ வைரல்! - Elephants Drone Visuals
Published : Jul 5, 2024, 7:48 PM IST
கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் அடிக்கடி வருவது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில், இன்று தொண்டாமுத்தூர் மருதமலையை அடுத்த செம்மேடு பகுதியில் மோகன் என்பவரது தோட்டத்திற்குள் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மேற்படி யானைகள் அங்கு வரும் நிலை ஏற்பட்டதால், அந்த பகுதியை ட்ரோன் கேமராக்கள் மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். எனவே, யானைகளின் அசைவுகளைக் கண்டு அவற்றை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், இது தொடர்பாக ஊர் மக்கள் கூறுகையில், “காட்டு யானை தற்போதெல்லாம் அடிக்கடி ஊருக்குள் வரும் சூழல் உருவாகியுள்ளது. எனவே இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். இந்நிலையில், விலைநிலங்களில் அட்டகாசம் செய்யும் யானைகளின் வீடியோ காட்சி ட்ரோன் மூலம் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் பார்ப்பவரை மெய்மறக்க வைப்பதாக இருப்பதால் இணையத்தில் வைரலாகி வருகிறது.