சாலை தடுப்பின் மீது மோதியதில் இளைஞரின் கை துண்டானது.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி! - CHENNAI Bike ACCIDENT - CHENNAI BIKE ACCIDENT
🎬 Watch Now: Feature Video
Published : Jul 5, 2024, 5:33 PM IST
சென்னை: சென்னை திருவான்மியூரில் இருந்து நீலாங்கரை நோக்கி விக்னேஷ் என்பவரும், அவரது நண்பரும் இன்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கொட்டிவாக்கம் பகுதியில் பிரமோத் மருத்துவமனை வாசலில் இருந்த சாலை தடுப்புச் சுவரில் மோதியதில், இருச்சக்கர வாகனத்தை ஓட்டி வந்த விக்னேஷ் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், அவரது கை துண்டானது. இதனையடுத்து, பின்னால் அமர்ந்திருந்த அவரது நண்பர் பதற்றத்துடன் அருகில் இருந்த பிரமோத் மருத்துவமனைக்குள் சென்று தகவல் தெரிவித்ததும் காணாமல் போயுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விபத்து நடந்த இடத்திற்கு வந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், படுகாயமடைந்த விக்னேஷை சிகிச்சைக்காக பிரமோத் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின், மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரனை நடந்து வரும் நிலையில், சம்பவ இடத்திலிருந்து ஓட்டம் பிடித்த விக்னேஷின் நண்பர் தலைமறைவாகி விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த விபத்து பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.