இருமா வருவான்..! - வைரலாகும் காவல்துறை விழிப்புணர்வு வீடியோ! - Video for Awareness about cell phone theft
🎬 Watch Now: Feature Video
சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் செல்போன் பறிப்பு சம்பவங்களினால் பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இத்தகைய குற்றங்களை காவலர் தீவிரமாகத் தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி, சென்னை மாநகர போலீசார் சிசிடிவி கேம்ராக்கள் உள்ளிட்டவற்றை அமைத்து பொதுமக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் தீவிரமாகக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் செல்போன் பறிப்பு சம்பவங்களைக் குறைப்பதற்காகவும் செல்போன் பருப்பில் ஈடுபடுபவர்களை இனம் கண்டுபிடித்து உடனே கைது செய்யவும் காவல்துறை தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் சென்னை பெருநகர காவல் துறை சார்பில் இது போன்ற செல்போன் பறிப்பு சம்பவங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தவம் திரைப்படத்தில் வடிவேலு நடித்த ஒரு உபயோகமான காமெடி காட்சியை வீடியோவாக பகிர்ந்துள்ளனர்.
அந்த வீடியோவின் மூலம் 'பொதுமக்கள் தங்களது அலைபேசியில் Anti-Theft Software செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். ஒருவேளை உங்கள் மொபைல் போன் காணாமல் போனாலோ அல்லது திருடுப் போக நேர்ந்தாலோ அதை விரைவில் கண்டுபிடிக்க இவை உங்களுக்கு உதவும்' என்று பதிவிட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை பெருநகர காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள அந்த வீடியோ பதிவு பலராலும் பகிரப்பட்டு வருகிறது.