தேனி கௌமாரியம்மன் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு! - தேரோட்டம்
🎬 Watch Now: Feature Video
தேனி: தேனியில் மிகவும் பழமை வாய்ந்த சந்தை மாரியம்மன் என்று அழைக்கப்படும் அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் வைகாசியை முன்னிட்டு 10 நாட்கள் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாகத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் முன்னதாக ஆலய மூலவர் கௌமாரியம்மனுக்கு வண்ண மலர்களால் சிறப்பாக அலங்கரித்துக் காட்சியளிக்கப்பட்டு தீபாராதனை காட்டினார். அதைத் தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு வண்ண பட்டு உடுத்தி மலர்மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்தார்.
பின்னர் வண்ண மலர்களால் அலங்கரித்துக் காட்சியளிக்கப்பட்டிருந்த தேரின் மீது கலசத்தை ஆலயத்திலிருந்து எடுத்து வந்து தேரின் உச்சியில் வைத்து, உற்சவர் அம்மனுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டு சிவாச்சாரியார்கள் தோலில் சுமந்து கொண்டு திருத்தேரில் அமர்த்தினர்.
பின், தேரில் அமர்ந்து காட்சியளித்த உற்சவர் அம்மனுக்குத் தீபாராதனை காட்டிய பின்பு நாதஸ்வரம் மேளதாளங்கள் முழங்கப் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கூடி நின்று திருத்தேரை வடம் பிடித்து இழுத்து திருத்தேரோட்டத்தை வெகு சிறப்பாகக் கொண்டாடினர்.