கொடைக்கானலில் பொங்கல் கொண்டாட்டம்; வெளிநாட்டவர்கள் பங்கேற்பு - வெளிநாட்டவர்கள் குத்தாட்டம்
🎬 Watch Now: Feature Video

திண்டுக்கல்: கொடைக்கானலில் வட்டக்கானல் பகுதியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாகவும், வட்டக்கானல் மக்கள் சார்பாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பொங்கல் விழாவின்போது சிலம்பாட்டம், கரகம், பொய்க்கால் குதிரை உள்ளிட்டவை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு செய்து காட்டப்பட்டது. அப்போது உற்சாகமடைந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பறையடித்தும் இசைக்கேற்றவாறு குத்தாட்டம் போட்டும் பாடல் பாடியும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST