விழுப்புரத்தில் பைக்கில் இருந்து பெட்ரோல் திருட்டு - வெளியான சிசிடிவி காட்சி! - villupuram latest news
🎬 Watch Now: Feature Video
விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் அடுத்துள்ள பாண்டி ரோடு பகுதியில் ஸ்ரீராம் என்பவர் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவர் கடை எதிரே தனது இருசக்கர வாகனத்தை இரவில் நிறுத்தி வைத்திருந்துள்ளார். அப்போது அந்த வழியாகச் சென்ற இரண்டு இளைஞர்கள், அங்கு நின்று கொண்டிருந்த ஸ்ரீராமின் பைக்கில் இருந்து பெட்ரோல் திருடியுள்ளனர்.
தற்போது இது தொடர்பாக சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. மேலும் இவ்வாறு பெட்ரோல் திருடுவது உள்பட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து, காவல் துறையினர் தகுந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என அப்பகுதி வணிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.