குடும்ப பிரச்னையில் 14-வது மாடியில் இருந்து குதித்த மாணவர்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி! - பள்ளி மாணவர் தற்கொலை

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 24, 2023, 5:31 PM IST

சென்னை: ஆவடி, பருத்திப்பட்டு பகுதியில் 14 தளங்கள் கொண்ட தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. இங்கு 2ஆவது தளத்தில் குடியிருந்து வருபவர் பாலாஜி. இவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மலர். இவர் மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக உள்ளார். 

இவர்களுக்கு லோக்நாத் (17) என்ற மகன் உள்ளார். இவர் 10ஆம் வகுப்பு படித்து முடித்து விட்டு, 11ஆம் வகுப்பில் சேர இருந்தார். இந்த நிலையில் இன்று (மே 24) லோக்நாத், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மனமுடைந்து, 14 ஆவது தளத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி காவல் துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். 

அதில், லோக்நாத் சாதாரணமாக நடந்து சென்று, கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளும் சிசிடிவி காட்சிப் பதிவாகி இருந்தது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மாணவர் தற்கொலைக்கான காரணம் குறித்துப் பெற்றோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தலையை துண்டித்து உடலுடன் பயணம்.. லாரி டிரைவர் சிக்கியது எப்படி?

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.