பட்டப்பகலில் தள்ளுவண்டி கடையில் 5,000 ரூபாயை திருடி சென்ற மர்ம நபர் - சிசிடிவி காட்சி... - sirkazhi
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், சட்டநாதர் காலனி அருகே புதிய பேருந்து நிலையம் செல்லும் பாதையில் அம்சவல்லி என்ற மூதாட்டி தள்ளுவண்டியில் பழங்கள் வைத்து விற்பனை செய்து வருகிறார். இவர் தண்ணீர் குடிப்பதற்காக அருகில் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்டு அவ்வழியாக சென்ற மர்ம நபர், கடையில் உள்ள கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.5000 பணத்தை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து மூதாட்டி அளித்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த சீர்காழி காவல்துறையினர், திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST