சென்னையில் பலத்த காற்றுடன் மழை.. ராட்சத மரம் முறிந்து விழுந்ததில் கார், இருசக்கர வாகனம் சேதம்! - Car damaged in falling tree in Chennai
🎬 Watch Now: Feature Video
Published : Oct 31, 2023, 11:58 AM IST
சென்னை: ராயப்பேட்டையில் அதிவேக காற்றின் காரணமாக சாலையோரம் இருந்த ராட்சத மரம் முறிந்து விழுந்ததில், சாலையில் சென்று கொண்டிருந்த கார், இரு சக்கர வாகனம் சேதமடைந்தது.
சென்னையில் நேற்று காலை முதல் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னை ராயப்பேட்டை ஒயிட் சாலையில் ராட்சத மரம் ஒன்று திடீரென முறிந்து சாலையின் நடுவே விழுந்தது. அப்போது, அதன் வழியாக ஷா நவாஸ் என்பவர் காரை ஓட்டிச் சென்று உள்ளார்.
இந்நிலையில், மரம் முறிந்து சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீதும், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீதும் விழுந்தது. இதில் காரில் வந்த ஷா நவாஸ் என்பவருக்கு சேதம் எதுவும் இல்லாமல் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். ஆனால், இரு சக்கர வாகனம் முற்றிலுமாக உடைந்து சேதமடைந்தது.
இச்சம்பவம் குறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மயிலாப்பூர் தீயணைப்புத் துறை வீரர்கள், சாலையின் நடுவே விழுந்த மரத்தினை உடனடியாக அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.