Video: கட்டுப்பாட்டை இழந்த கார்.. ஒருவர் மரணம் அதிருஷ்டவசமாக தப்பிய இருவர்...!
🎬 Watch Now: Feature Video
வயநாடு: வயநாட்டில் கார் ஒன்று டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து மூன்று இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். கார் இறுதியாக ஒரு சுவரில் மோதி, நிற்கும்முன் மற்றொரு இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. கார் டிரைவர் மற்றும் பயணிகளும் காயமடைந்தனர். கொண்டோட்டியிலிருந்து மானந்தவாடி நோக்கிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பைக்குகள் மீது மோதியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். முதலில் கார் மோதியதில் காயமடைந்த சுனில் மேப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST
TAGGED:
one killed