மதுபோதையில் பஸ் கண்ணாடியை உடைத்த சிறுவர்கள்; சிசிடிவி காட்சிகள் வைரல் - intoxicated boys
🎬 Watch Now: Feature Video

கள்ளக்குறிச்சி: மதுபோதையில் இருந்த நான்கு சிறுவர்கள் துருகம் சாலையில் நள்ளிரவில் அமர்ந்து அலப்பறையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வழியாக சென்ற அரசு பேருந்தை கைகாட்டி நிறுத்த முயன்றபோது நிறுத்தாததால் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை பேருந்தின் பின்பக்க கண்ணாடியின் மீது வீசி உள்ளனர். இதில் பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் படுகாயமடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி காவல்துறையினர் நான்கு சிறுவர்களையும் கைது செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST