ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க தடை-மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு! - மாவட்ட ஆட்சியர் சாந்தி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16-08-2023/640-480-19282409-thumbnail-16x9-hokenagal.jpg)
தருமபுரி: கேரளா மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு அணைகளில் இருந்தும் கடந்த சில தினங்களாக சுமார் 10 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்ட உபரிநீர் நேற்று தமிழ்நாட்டின் எல்லையான பிலிகுண்டுலுவிற்கு சுமார் 4000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று படிப்படியாக உயர்ந்து தற்போது நிலவரப்படி வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
இந்த நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிசல் இயக்க தடை விதிக்கபட்டுள்ளது. மேலும், காவிரி கரையோரம் உள்ள பொது மக்கள் ஆற்றை கடக்கவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு செல்லவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
தமிழ்நாடின் எல்லையான பிலிகுண்டுலுவிற்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மத்திய நதிநீர் ஆணையம் கண்காணித்து வருகின்றது. மேலும், நுழைவு வாயிலில் வருவாய் துறையினர், காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.