பொள்ளாச்சி நகராட்சிக்கு எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம் - குப்பைக்கிடங்கை மாற்றி அமைக்க கோரிக்கை!
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர் பொள்ளாச்சி பாரதிய ஜனதா நகரத் தலைவர் பரமகுரு தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் கடந்த சில தினங்களுக்கு முன்னர், பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா மற்றும் நகராட்சி ஆணையாளரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டன. அந்தப் புகாரில், 36ஆவது வார்டுகளில் உள்ள கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றக் கோரியும், சொத்து வரி, குடிநீர் வரி, மின்சார கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
அந்த மனுவுக்கு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், பொள்ளாச்சி - பல்லடம் சாலையில் நகரத் தலைவர் பரமகுரு தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், பொதுமக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள உரக்கிடங்கு மற்றும் குப்பைக்கிடங்கை மாற்றி அமைக்கக்கோரி, பலமுறை மனுக்கள் அளித்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.
மேலும், பொள்ளாச்சி நகராட்சியைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொள்ளாச்சி ஏ.எஸ்.பி.பிருந்தா மற்றும் நகராட்சி ஆணையாளர் ஸ்ரீதேவி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், விரைவில் குப்பைக்கிடங்கு மாற்றி அமைக்கப்படும் என உறுதி அளித்தனர்.
அதன்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த, திடீர் சாலை மறியல் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: டிஐஜி தற்கொலை விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் கேள்வியெழுப்புவோம் - ஈபிஎஸ் பேச்சு