அண்ணாமலை பாதயாத்திரையில் புகுந்த காட்டெருமை!... அலறியடித்து ஓடிய பாஜகவினர்! - annamalai horse raid
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13-09-2023/640-480-19497915-thumbnail-16x9-dgl.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Sep 13, 2023, 7:43 AM IST
திண்டுக்கல் : கொடைக்கானலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையில் நடைபயணத்தில் ஒற்றை காட்டெருமை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு உள்ளார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென்தமிழக மாவட்டங்களில் சுற்றுப்பயணம் நிறைவடைந்த நிலையில் தற்போது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.
நாயுடுபுரம் பகுதியில் தொடங்கிய அண்ணாமலையின் நடைபயணம் மூஞ்சி கல்லில் நிறைவடைந்தது. இதனிடையே நாயுடுபுரம் பகுதியில் அண்ணாமலையின் நடைபயணத்தில் திடீரென ஒற்றை காட்டெருமை புகுந்தது. இதனால் பொது மக்கள் பாஜக தொண்டர்கள் பதறி ஓடினர். ஆயசமாக வலம் வண்ட காட்டெருமையை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற நடைபயணத்தின் போது அண்ணாமலை குதிரை மீது சவாரி செய்தவாறு மக்களிடையே ஆதரவு திரட்டினர். பேருந்து நிலையம் வழியாக மூஞ்சிக்கல் சென்ற அண்ணாமலை பொது மக்கள் முன்னிலையில் உரையாற்றினார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வருகையை முன்னிட்டு முக்கிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவு பொது மக்கள் பலர் அவதிக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.