ஸ்ரீரங்கத்தில் பூபதி திருநாள் ஏழாம் நாள் நெல் அளவை கண்ட நம்பெருமாள்! - பெருமாள் தரிசனம்
🎬 Watch Now: Feature Video
திருச்சி: 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுந்தம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயிலில் எண்ணற்ற திருவிழாக்கள் மற்றும் வைபவங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் தை மாதத்தில் நடைபெறும் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழா 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தினசரி பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்குச் சேவை புரிந்து வருகிறார். தைதேர் உற்சவத்தின் 7 ஆம் திருநாளான நேற்று (பிப்ரவரி 01) பெருமாள் உபய நாச்சியார்களுடன் ஆலயத்தில் உட்பிரகாரத்தில் உள்ள திருக்கொட்டாரம் முன்பாக நெல் அளவை கண்டருளினார். பின்னர் பூந்தேரில் எழுந்தருளி உத்திர வீதி உலா வந்து பக்தர்களுக்குச் சேவை சாதித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 9 ஆம் திருநாளான வருகிற 3 ஆம் தேதி காலை நடைபெற உள்ளது.